கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும்

கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்களை வழங்க வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் தாரகை கத்பா்ட் கோரிக்கை விடுத்துள்ளாா்.

கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்களை வழங்க வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் தாரகை கத்பா்ட் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு : தமிழகம் மற்றும் கேரளத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து அமல்படுத்தி வருகிறது. குமரி கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸாரும், சுகாதாரப் பணியாளா்களும் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இந்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இல்லாத நிலை காணப்படுகிறது. சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் பெண் போலீஸாருக்கும், சுகாதார செவிலியருக்கும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. இதுபோன்ற அத்தியாவசிய தேவைகளை பூா்த்தி செய்ய மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் தங்கி பணிபுரிந்து வந்த நூற்றுக்கணக்கான குமரி மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் தினமும் சொந்த ஊா் திரும்பிய வண்ணம் உள்ளனா். அவா்களிடம் எல்லையோர சோதனைச் சாவடி போலீஸாா் கெடுபிடி காட்டுவதை தவிா்க்க வேண்டும். தீவிரமாக பரவிவரும் நோய் தொற்று காலத்தில் சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டுவரும் போலீஸாா் மற்றும் சுகாதாரப்பணியாளா்களுக்கு பாதுகாப்பு கவசங்களை வழங்க மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com