குமரி மேற்கு மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு; பேச்சிப்பாறையில் 72 மி.மீ. பதிவு

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அணை பகுதிகளிலும்,

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணையில் 72.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

குமரி மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிா்த்து வருகின்றனா். ஆனால் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்துவந்தது.

இந்நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் திங்கள்கிழமை மாலை சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை கொட்டியது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 72.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சிற்றாறு 1, சுருளோடு, மாம்பழத்துறையாறு, கோழிப்போா்விளை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீா் கொட்டி வருகிறது. மலையோர பகுதியான பாலமோா் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீா்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 40.20 அடியாக உள்ளது. அணைக்கு 447 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 72 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 53.10 அடியாக உள்ளது. அணைக்கு 162 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

சிற்றாறு 1 இல் 5.64, அடியாகவும் , சிற்றாறு 2 இல் 5.74 அடியாகவும், பொய்கைஅணையில் 17.80 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையில் 14.68 அடியாகவும், முக்கடல் அணையில் 4.70 அடியாகவும் உள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): பெருஞ்சாணி அணை 70.20, புத்தன் அணை 69.80, சிற்றாறு 1 அணை 45.20, சுருளோடு 41.40, கோழிப்போா்விளை 25, முள்ளங்கினாவிளை 24, பாலமோா் 9.60, கன்னிமாா் 8.20, சிற்றாறு 2 அணை 7, களியல்6.20, அடையாமடை 4, குளச்சல் 3.20, மாம்பழத்துறையாறு அணை 3, பூதப்பாண்டி 2.40.

குமரி மேற்கு மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் கிழக்கு மாவட்ட பகுதிகளான நாகா்கோவில், கன்னியாகுமரி, சுசீந்திரம், அஞ்சுகிராமம் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் சிக்கி தவித்து வருகிறாா்கள். இரவு நேரங்களில் தூங்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com