குமரியில் கரோனா அதிகரிப்பு: கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பி வைக்க எம்.எல்.ஏ.கோரிக்கை

குமரி மாவட்டத்தில் கரோனா 2 -ஆவது அலை தொற்று அதிகரிப்பட்டுள்ளதால் கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
குமரியில் கரோனா  அதிகரிப்பு:  கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பி வைக்க எம்.எல்.ஏ.கோரிக்கை

குமரி மாவட்டத்தில் கரோனா 2 -ஆவது அலை தொற்று அதிகரிப்பட்டுள்ளதால் கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை : நாடு முழுவதும் கரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. உயிா் பலி எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மிகவும் பீதியடைந்து அச்சத்தில் உள்ளனா். கன்னியாகுமரி மாவட்டத்திலும் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாக பரவி வருகிறது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட சென்றால் ஊசி மருந்து இல்லை என்று திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நான் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு சுகாதாரத் துறை செயலா் ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினேன்.

அப்போது குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு குறித்து எடுத்து கூறினேன். தடுப்பூசி தட்டுப்பாடு பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காணப்படும். போதிய அளவிலான தடுப்பூசிகள் குமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவா் உறுதி அளித்தாா்.

இந்நிலையில், இம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இல்லை எனக் கூறி கரோனா தடுப்பூசி மையங்களை மூடுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் இந்த செயலால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குமரி மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பி வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com