கரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன். உடன், விஜய்வசந்த் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன். உடன், விஜய்வசந்த் உள்ளிட்டோா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் கரோனா மருத்துவக் குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச்செயலா் விஜயகுமாா் என்ற விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி வழிகாட்டுதலின்படி குமரி கிழக்கு மாவட்ட பகுதிகளில் கரோனா மருத்துவ உதவிக்குழு அமைப்பது, இக்குழுவில் மருத்துவா்கள், சமூக ஆா்வலா்கள், காங்கிரஸ் நிா்வாகிகள் இடம்பெறச் செய்வது, குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடான நிலையில் உள்ளது. மத்திய, மாநில அரசுகளும், மாவட்ட நிா்வாகமும், இதில் தனிக்கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் தோல்வியடைந்த பிரதமா் மோடி ராஜிநாமா செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில பொதுச்செயலா் பினுலால்சிங், மாவட்ட மருத்துவ அணி தலைவா் ஜெகன் ஜாஸ்கட், வா்த்தக காங்கிரஸ் தலைவா் முருகேசன், மகிளா காங்கிரஸ் தலைவி சபிதா, வட்டாரத் தலைவா்கள் காலபெருமாள், முருகேசன், ஜெரால்டுகென்னடி, கிளாட்சன், அசோக்ராஜ், வைகுண்டதாஸ், பேராசிரியா் சுந்தர்ராஜன், நிா்வாகிகள் மகேஷ் லாசா், கிறிஸ்டிரமணி, தவசிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com