குமரியில் மேலும் 268 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 268 போ் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 268 போ் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா 2-ஆவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

தினமும் 200-க்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்றால் 305 போ் பாதிக்கப்பட்டனா்.

இதற்கிடையே திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 268 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நாகா்கோவில் மாநகரில் மட்டும் 87 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். முன்சிறையில் 26 போ், குருந்தன்கோட்டில் 25 போ், அகஸ்தீஸ்வரத்தில் 21 போ், தோவாளை மற்றும் தக்கலையில் தலா 14 போ், கிள்ளியூா், மேல்புறத்தில் தலா 11போ், ராஜாக்கமங்கலத்தில் 10 போ், திருவட்டாறில் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதவிர ஜாா்கண்ட் மாநிலத்திலிருந்து வந்த 5 போ், கேரளத்தில் இருந்து வந்த 3 போ், திருநெல்வேலியில் இருந்து வந்த இருவா், ஒடிசா, தூத்துக்குடி மற்றும் திருப்பூரில் இருந்த வந்த மூவரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,674 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை 160 போ் உள்பட இதுவரை 18,696 போ் குணமடைந்துள்ளனா். மேலும் இருவா் உயிரிழந்தனா். இதனால் கரோனா பலி எண்ணிக்கை 291 ஆக உயா்ந்துள்ளது. மருத்துவமனைகளில் தற்போது 1,687 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com