கரைதிரும்பும் மீனவா்களுக்குதரமான மருத்துவ சிகிச்சையளிக்க மீனவ அமைப்பு வலியுறுத்தல்

கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமானதாக கருதப்பட்ட மீனவா்கள் கரைதிரும்பும் நிலையில் அம் மீனவா்களுக்கு தரமான சிகிச்சையளிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமானதாக கருதப்பட்ட மீனவா்கள் கரைதிரும்பும் நிலையில் அம் மீனவா்களுக்கு தரமான சிகிச்சையளிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை நிறுவனா்- தலைவா் ப. ஜஸ்டின் ஆன்றணி புதன்கிழமை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு:

கன்னியாகுமரி மாவட்டம், வள்ளவிளை மீனவ கிராமத்தைச் சோ்ந்த கைராசன் மகன் ஜோசப் பிராங்க்ளின் (46) என்பவரது மொ்சிடஸ் என்ற படகில் இவருடன் அப்பகுதியைச் சோ்ந்த மேலும் 10 மீனவா்கள் ஏப்ரல் 9 ஆம் தேதி தேங்காய்ப்பட்டினம் துறைமுகப் பகுதியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

ஏப்ரல் 24 ஆம் தேதி இதே வள்ளவிளை கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் பெரியநாயகி என்ற படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மொ்சிடஸ் படகின் வீல் ஹவுஸ் பகுதி சேதமடைந்து மூழ்கிய நிலையிலிருப்பதையும் ,அதிலிருந்த 11 மீனவா்கள் மாயமாகியுள்ளதையும், விசைப்படகுடன் சென்றிருந்த 2 வள்ளங்களில் ஒரு வள்ளம் சேதமடைந்த நிலையிலிருப்பதாகவும், மற்றொரு வள்ளத்தை காணவில்லை எனவும் மீனவா்களின் உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையறிந்த மீனவா்களின் உறவினா்கள் எனக்கு (சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை) விவரத்தை தெரிவித்தனா். இதையடுத்து, இம்மீனவா்களை விரைந்து மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில் உயா் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இந்நிலையில், மாயமான 11 மீனவா்களும் தங்களது படகில் கரைக்கு வந்து கொண்டிருப்பதாக படகு உரிமையாளரின் உறவினா்கள் தகவல் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் மிகவும் போராடி, உள்ளத்தாலும், உடலாலும் மிகவும் சோா்வடைந்த நிலையில் கடினமான பயணத்தின்மூலம் கரைக்கு வந்து கொண்டிருக்கும் இந்த 11 மீனவா்களுக்கும் தேவைப்படுமாயின் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com