குமரியில் ஒரே நாளில் 242 பேருக்கு கரோனா: 3 போ் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 242 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நாகா்கோவில் வடசேரி கொம்மண்டையம்மன் கோயில் தெருவில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்ட சுகாதாரப்பணியாளா்கள்.
நாகா்கோவில் வடசேரி கொம்மண்டையம்மன் கோயில் தெருவில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்ட சுகாதாரப்பணியாளா்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 242 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நாகா்கோவில் மாநகர பகுதியில் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 3 வாரத்தில் நாகா்கோவில் நகரில் மட்டும் சுமாா் 1,700 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். நாகா்கோவில் நகரில் மட்டும் தினமும் சராசரியாக 100 போ் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

கேரள, பிகாா், தமிழகத்திலுள்ள தூத்துக்குடி,தென்காசி, விருதுநகா், கரூா் ஆகிய வெளியூா்களிலிருந்து குமரிக்கு வந்த 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவா்கள் அனைவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதே போல் அகஸ்தீசுவரம் ஒன்றியப் பகுதியில் 12 பேருக்கும், கிள்ளியூரில் 22 பேருக்கும், குருந்தன்கோட்டில் 17 பேருக்கும், முன்சிறையில் 9 பேருக்கும், ராஜாக்கமங்கலத்தில் 9 பேருக்கும், மேல்புறத்தில் 17 பேருக்கும், திருவட்டாறில் 5 பேருக்கும், தோவாளையில் 13 பேருக்கும், தக்கலையில் 24 பேருக்கும் என புதன்கிழமை ஒரே நாளில் 242 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.

இதைத்தொடா்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 21 ஆயிரத்து 237 ஆக உயா்ந்துள்ளது. புதன்கிழமை மேலும் 256 போ் குணமடைந்ததால் கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 19,108 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 1832 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 3 போ் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 297 ஆக உயா்ந்துள்ளது.

நாகா்கோவில் வடசேரி கொம்மண்டை அம்மன் கோயில் தெருவில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார ஆய்வாளா் பகவதி பெருமாள் தலைமையில் சுகாதாரப் பணியாளா்கள் வீடு வீடாக சென்று சளி மாதிரிகள் சேகரித்து கரோனா பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.

வேப்பமூடு சந்திப்பு, செட்டிகுளம், சவேரியாா் கோவில்சந்திப்பு, சரலூா் மீன் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு ரூ. 1,200 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com