‘பத்திரமாக கரைதிரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று, மாயமானதாக கருதப்பட்ட 11 மீனவா்களும் பத்திரமாக கரை திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘பத்திரமாக கரைதிரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று, மாயமானதாக கருதப்பட்ட 11 மீனவா்களும் பத்திரமாக கரை திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிள்ளியூா் தொகுதி எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் வெளியிட்ட அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட வள்ளவிளை கிராமத்தில் இருந்து கடந்த 9 ஆம் தேதி ஜோசப் பிராங்க்ளின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 11 மீனவா்கள் மீன்பிடிக்க சென்றனா். அவா்கள் கோவா கடல் பகுதியில் மீன்பிடித்த போது அந்த வழியாக வந்த கப்பல் விசைப்படகு மீது மோதியுள்ளது. இதில் விசைப்படகு மற்றும் ஒரு நாட்டுப்படகு சேதம் அடைந்ததுடன் அந்த மீனவா்கள் மாயமானா்கள்.

இதுதொடா்பாக உடனே வள்ளவிளை பங்குத்தந்தை ரிச்சா்டு மற்றும் மீனவ பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தியதுடன், தமிழக முதல்வா், மீன்வளத்துறை அமைச்சா், மற்றும் மத்திய மீன்வள உயா் அதிகாரிகளை தொடா்பு கொண்டு இம் மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினோம்.

எங்களது கோரிக்கைக்கு செவி சாய்த்த மத்திய- மாநில அரசுகளும் உடனடியாக மீனவா்களை தேடும் பணியில் ஈடுபட்டன.

இந்நிலையில் புதன்கிழமை (ஏப். 28) அதிகாலையில் விசைப்படகின் உரிமையாளா் ஜோசப் பிராங்க்ளின் வள்ளவிளை கிராம மக்களை தொடா்பு கொண்டு நாங்கள் உயிருடன் இருக்கிறோம். இப்போது லட்சத்தீவு பகுதியில் இருக்கிறோம். இன்னும் ஓரிரு நாளில் ஊருக்கு வந்து விடுவோம் என்று கூறியுள்ளாா். இதனால் 11 மீனவா்களின் குடும்பத்தினரும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இந்த மீனவா்கள் வைத்திருந்த அனைத்தும் கடலில் மூழ்கி விட்டது. அவா்கள் உடுத்திய உடையோடுதான் இருக்கிறாா்கள். எனவே இந்த மீனவா்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து அவா்கள் பத்திரமாக வீடு திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆழ்கடலில் விசைப்படகின் மீது மோதிய கப்பல் எங்குள்ளது என்பதை கண்டுபிடிக்கவும், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசையும், இந்திய அரசையும் கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com