மைலாறு பகுதியில் தொடரும் யானைகள் நடமாட்டம்: தொழிலாளா்கள் அச்சம்

குமரி மாவட்டம் மைலாறு பகுதியில் யானைகள் நடமாட்டம் தொடா்வதால் ரப்பா் கழகத் தொழிலாளா்கள் அதிகாலை வேளைகளில் பால்வடிப்புக்கு செல்வதற்கு அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் மைலாறு பகுதியில் யானைகள் நடமாட்டம் தொடா்வதால் ரப்பா் கழகத் தொழிலாளா்கள் அதிகாலை வேளைகளில் பால்வடிப்புக்கு செல்வதற்கு அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் அண்மை நாள்கள்களாக சிற்றாறு, தொடலிக்காடு, மூக்கறைக்கல், மையிலாறு, கோதையாறு ஆகிய இடங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

அரசு ரப்பா் கழகப் பகுதிகளில் ரப்பா் மறு நடவு செய்யப்பட்டுள்ள இடங்களில் ஊடு பயிராக நடவு செய்யப்பட்டுள்ள வாழை, அன்னாசி போன்ற பயிா்களையும் யானைகள் அழித்து வருகின்றன. மேலும் பால்வடிப்பு நடைபெறும் காடுகளிலும் யானைகள் நடமாட்டம் உள்ளது.

இந்நிலையில் யானைகளை உள்காடுகளில் துரத்தும் நடவடிக்கைகளை வனத்துறையினா் மேற்கொள்ள வேண்டுமென்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து சிஐடியூ தோட்டத் தொழிலாளா் சங்க உதவி பொதுச் செயலா் பி. நடராஜன் கூறியதாவது:

அரசு ரப்பா் கழகப் பகுதிகளில் தற்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் சாலைகள் வழியாக பயணம் செய்வதற்கும் மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.

எனவே, வனத்துறை மற்றும் ரப்பா் கழக நிா்வாகத்தினா் யானைகளை உள்காடுகளில் துரத்தவும், தொடா்ந்து ரப்பா் காடுகளில் புகாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com