வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண் ணும் மையத்தை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மா. அரவிந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த்.

குமரி மாவட்டத்திலுள்ள கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூா், விளவங்கோடு ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாகா்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.

கோணம் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் சிவகுருபிரபாகரன், தோ்தல் வட்டாட்சியா் சேகா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com