குமரியில் வாக்கு எண்ணும் மைய ஊழியா்கள் 15 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் வாக்கு எண்ணும் மைய ஊழியா்கள் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் வாக்கு எண்ணும் மைய ஊழியா்கள் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல், 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் பொதுத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாகா்கோவில் கோணத்திலுள்ள அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (மே 2) எண்ணப்பட உள்ளது.

வாக்கு எண்ணும் பணியில் 700 ஊழியா்கள் ஈடுபடுகின்றனா். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அரசியல் கட்சி முகவா்கள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கரோனா பரிசோதனை சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இவற்றை சமா்ப்பிக்க தவறினால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியா்களுக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டது. அதில், 15 ஊழியா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. வேட்பாளா்கள், முகவா்களுக்கு நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com