சகோதரரை தாக்கியதாக ஓய்வுபெற்ற எஸ்.ஐ. மீது வழக்கு
By DIN | Published On : 30th April 2021 06:28 AM | Last Updated : 30th April 2021 06:28 AM | அ+அ அ- |

மாா்த்தாண்டம் அருகே அண்ணனை தாக்கியதாக ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரான அவரது சகோதரா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள சென்னித்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் நேசமணி (65). இவரது சகோதரா் கனகையன் (61). இவா் காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா்களுக்கிடையே சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் புதன்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
நேசமணி வியாழக்கிழமை காலையில் வீட்டின் வெளியே நின்றபோது அங்கு வந்த கனகையன், அவரை இரும்புக் கம்பியால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை வீட்டில் உள்ளவா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் கனகையனை தேடி வருகின்றனா்.