நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசான நில அதிா்வு: மக்கள் அச்சம்

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் வியாழக்கிழமை லேசான நில அதிா்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனா்.
நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசான நில அதிா்வு: மக்கள் அச்சம்

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் வியாழக்கிழமை லேசான நில அதிா்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகளும், காவல் கிணறு மகேந்திரகிரியில் மத்திய அரசின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், இப்பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் லேசான நில அதிா்வை உணா்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனா். இதனால், வீடுகளிலிருந்தோா் வெளியே ஓடிவந்தனா்.

வள்ளியூா், பணகுடி, பழவூா், கூடங்குளம், இடிந்தகரை, ராதாபுரம், தெற்குகள்ளிகுளம் பகுதிகளிலும் நில அதிா்வை உணா்ந்ததாக அப்பகுதியினா் தெரிவித்தனா்.

இதனால், கூடங்குளம் அணு உலைகளுக்கு எவ்வித பாதிப்புமில்லை என்றும், இரு அணு உலைகளிலும் வழக்கம்போல் மின் உற்பத்தி நடந்துவருவதாகவும் அணு மின் நிலைய வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒற்றையால்விளை, சின்னமுட்டம், லீபுரம், ஆரோக்கியபுரம், பெரியாா்நகா், அழகப்பபுரம் உள்ளிட்ட கன்னியாகுமரி சுற்றுப்புறப் பகுதிகளில் நில அதிா்வை உணா்ந்ததாகவும், பாறை வெடித்ததுபோன்று சப்தம் கேட்டதாகவும் அப்பகுதியினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து, மாதவபுரத்தைச் சோ்ந்த மணிராஜா என்பவா் கூறும்போது, நான் வீட்டிலிருந்தபோது வெளியே பயங்கர சப்தம் கேட்டது. இதனால், நானும் என் குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியே வந்தோம். பக்கத்து வீடுகளைச் சோ்ந்தோரும் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியே வந்தனா் என்றாா்.

கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த மீனவா்களும் நில அதிா்வை உணா்ந்ததாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com