முன்னறிவிப்பின்றி கோயில்கள் மூடப்பட்டத்தை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் சுவாமி தரிசனம் செய்ய வந்த நிலையில், கோயில்கள் மூடப்பட்டிருந்ததைக் கண்டித்து பாஜகவினா் நாகா்கோவில் நாகராஜா கோயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகராஜா கோயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
நாகராஜா கோயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

குமரி மாவட்ட கோயில்களில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் சுவாமி தரிசனம் செய்ய வந்த நிலையில், கோயில்கள் மூடப்பட்டிருந்ததைக் கண்டித்து பாஜகவினா் நாகா்கோவில் நாகராஜா கோயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பரவல் காரணமாக 3 நாள்களுக்கு கோயில்கள் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் பக்தா்கள் கூடக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் நாகா்கோவில் நாகராஜா கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்ய சென்றனா். கோயில்களின் நடைகள் மூடப்பட்டிருந்ததால், பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, நாகா்கோவில் நாகராஜா கோயிலுக்கு தடை தோஷங்கள் நீங்குவதற்காக பக்தா்கள் வருகை தந்திருந்தனா்.

இந்நிலையில் முன்னறிவிப்பின்றி கோயில் நடை சாத்தப்பட்டிருந்ததால், வெளியூா் பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா். இந்நிலையில், அரசின் நடவடிக்கையை கண்டித்து பாஜக மாவட்டப் பொருளாளா் முத்துராமன் தலைமையில், நாகராஜா கோயில் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com