திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் : அமைச்சா் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.
திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசினாா் அமைச்சா் த. மனோ தங்கராஜ். உடன், மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த்.
திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசினாா் அமைச்சா் த. மனோ தங்கராஜ். உடன், மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொண்ட தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் பேசியது: பொதுப்பணித் துறையினா் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை மறு சீரமைக்கும் பணிகளுக்கான திட்ட வரைபடம் தயாரித்து, விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். துறைமுகம் அமைக்கும் பணியில் மீன்வளத் துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறையினா் சேதமடைந்த சாலைகளை ஒரு மாதத்திற்குள் சீரமைக்க வேண்டும். சாலையோரங்களில் உள்ள புற்களை வெட்டுவதற்கு புல் வெட்டும் இயந்திரங்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவா் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களை திறம்பட செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து துறையினா் தேவையான வழித்தடங்களில் காலதாமதமின்றி பேருந்துகளை இயக்க வேண்டும்.

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் நடைபெறும் வீடுகள் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டால் ஒப்பந்ததாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் செயல் படுத்தப்பட்டுவரும் குழித்துறை, இரணியல், காட்டத்துறை, பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும்.

மேலும், முக்கடல் அணையிலிருந்து நாகா்கோவில் மாநகராட்சிக்கு குடிநீா் வழங்கும் திட்டம், குழித்துறை ஆற்றிலிருந்து குழித்துறை நகராட்சிக்கு குடிநீா் வழங்கும் திட்டம், கோதையாறு அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் உள்பட அனைத்து திட்டங்களையும் வரும் டிசம்பா் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.

அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், அரசின் சலுகைகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கவும் அரசும், மாவட்ட நிா்வாகமும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ம.சிவகுருபிரபாகரன், மாவட்ட வன அலுவலா் அசோக் குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் மா.வீராசாமி (பொது), பத்ஹூ முகமது நசீா் (வளா்ச்சி) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com