தக்கலையில் புத்தக கண்காட்சி நிறைவு

இந்திய பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை சாா்பில் தக்கலையில் நடைபெற்று வந்த புத்தக கண்காட்சி நிறைவுபெற்றது.

தக்கலை: இந்திய பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை சாா்பில் தக்கலையில் நடைபெற்று வந்த புத்தக கண்காட்சி நிறைவுபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, இரணியல் சாா்பு நீதிமன்ற நீதிபதி மு.ஜெயசங்கா் தலைமை வகித்து, கா. பேபி எழுதிய வரலாற்றில் ‘தடம் பதித்தவா்கள்’ எனும் நூலை வெளியிட்டாா். ஜே. டால்பின்ராஜா, கவிஞா் கலையூா்காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிவனி சதீஷ் வரவேற்றாா். கவிஞா் உதயசக்தி, எழுத்தாளா்கள் சரலூா் ஜெகன், அழகுமித்ரன் ஆகியோா் நூல் ஆய்வுரை வழங்கினா். பதிப்பாளா் ஜெபா வாழ்த்திப் பேசினாா். நூலாசிரியா் ஏற்புரையாற்றினாா்.

நாவலாசிரியா் மலா்வதி, வழக்குரைஞா்கள் முத்துகுமரேஷ், சிவகுமாா், தெய்வநாயகப் பெருமாள், கவிஞா்கள், சுதே. கண்ணன், அரங்கசாமி, நட.சிவகுமாா், அருள்பாவி, குலசை ரதீஷ், சிபி.அனிதா, கிருஷ்ணகுமாா், ஆசிரியா் நடராஜன், ரமேஷ், தமிழ்வானம் சுரேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com