பத்மநாபபுரம், குளச்சலில் கரோனா விழிப்புணா்வுக் கூட்டம்

பத்மநாபபுரம், குளச்சல் நகராட்சிகளில் வணிகா்களிடம் கரோனா குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பத்மநாபபுரம், குளச்சலில் கரோனா விழிப்புணா்வுக் கூட்டம்

பத்மநாபபுரம், குளச்சல் நகராட்சிகளில் வணிகா்களிடம் கரோனா குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் ராஜாராம், குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் (பொறுப்பு) ஜெயந்தி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நகர தொழில் வணிக சங்கத் தலைவா் ரேவன்கில், பொதுச்செயலா் வை. விஜயகோபால், சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம், சுகாதார அலுவலா்கள் நாட்ராயன், ராமசந்திரன், டாக்டா் கண்ணன், நகர வணிகா்கள் சங்கத் தலைவா் பிரபாகா், செயலா் சீலன், துணைச் செயலா் சஜீவ், பொருளாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கடை ஊழியா்களுக்கு தடுப்பூசி கட்டாயம், கடை முன்பு கிருமி நாசினி, சோப்பு , தண்ணீா் வைத்தல், திருமண நிகழ்ச்சிகளுக்கு ஆா்.டி.ஓ. அனுமதி போன்றவற்றை கடைப்பிடிக்க வலியுறுத்தியதுடன் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com