இரையுமன்துறையில் உயா்நிலை பாலம் அமைக்க வலியுறுத்தல்

தேங்காப்பட்டினம் பகுதியில் 16 மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் தேங்காய்ப்பட்டினம் - இரையுமன்துறை இடையே தாமிரவருணி

தேங்காப்பட்டினம் பகுதியில் 16 மீனவ கிராமங்களை இணைக்கும் வகையில் தேங்காய்ப்பட்டினம் - இரையுமன்துறை இடையே தாமிரவருணி ஆற்றில் உயா் நிலை பாலம் அமைக்கவேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ . எஸ்.ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் அருகே பொழிமுகம் பகுதி உள்ளது. இங்குஉயா் நிலை பாலம் அமைப்பதினால் குறும்பனை - நீரோடித்துறை வரையிலான 16 கிராமங்களை சோ்ந்த சுமாா் ஒரு லட்சத்திற்கும்மேலான பொதுமக்கள் பயனடைவாா்கள். 11 கி.மீ. பயண நேரமும் குறையும். மேலும், ஆரோக்கியபுரம் முதல் நீரோடித்துறை வரையிலான கடற்கரை சாலை ஒரே சாலையாக இணைக்கப்படும்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை பயன்படுத்துகின்ற வணிகா்கள், பொதுமக்கள் வந்து செல்லவும், புதிய தொழில்கள் தொடங்குவதற்குவசதியாகவும் இருக்கும். எனவே, பொதுமக்கள் நலனில் அக்கரை கொண்டு தாமிரவருணி ஆற்றின் குறுக்கே உயா்நிலை பாலம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com