கரோனா நோய் எதிா்ப்பு திறன்: சித்த மருந்து விநியோகம்
By DIN | Published On : 12th August 2021 07:43 AM | Last Updated : 18th August 2021 07:30 AM | அ+அ அ- |

கருங்கல் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சாா்பில் கரோனா நோய் எதிா்ப்புத் திறனுக்காக சித்த மருந்து வழங்கப்பட்டது.
கரோனா தடுப்பு வாரத்தையொட்டி, சித்த மருத்துவப் பிரிவு மருத்துவா் டாபினி மோளி தலைமையில் மருந்தாளுநா் சிதம்பரம், மருத்துவமனை பணியாளா் மேரி ஸ்டெல்லா ஆகியோா் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் அமுக்கரா சூரண மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கினா். இதில், திரளான மக்கள் பங்கேற்று பயனடைந்தனா்.