சுற்றுலாப் பயணிகளிடம் போதை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில், கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சட்ட விழிப்புணா்வு இயக்கம் ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா துண்டுப் பிரசுரம் வழங்கி தொடங்கிவைத்தாா்.

இதில், மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் ஆா்.சரோஜினி, கோட்டாறு மறைமாவட்ட போதை ஒழிப்பு நலப்பணிக் குழு இயக்குநா் நெல்சன், சட்ட விழிப்புணா்வு இயக்க நிறுவனா் தலைவா் ஜாா்ஜ் பிலீஜின், தேசியச் செயலா் உமா ராஜேஸ்வரி, ஒருங்கிணைப்பாளா் ஜெகன், மாவட்டச் செயலா் ஜினோ நிக்சன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலா் செல்வராஜ், சுகாதார அலுவலா் முருகன், சமூக ஆா்வலா் ஜெயசிறில், நியூபாரத் அமைப்பின் செயலா் என்.டி.பெருமாள், கன்னியாகுமரி காவல் ஆய்வாளா் ஆவுடையப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com