நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவருக்கு மாநில அளவில் விருது

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவா் மாநில அளவில் விருது பெற்று சாதனை படைத்துள்ளாா்.

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவா் மாநில அளவில் விருது பெற்று சாதனை படைத்துள்ளாா்.

தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாட்டு மையத்தின் மூலம் மாணவா்களுக்கு புதிய கண்டுபிடிப்பிற்கான (பஹம்ண்ப்சஹக்ன் நற்ன்க்ங்ய்ற் ஐய்ய்ா்ஸ்ஹற்ா்ழ் அஜ்ஹழ்க் 2020) விருதுக்கான மாநில அளவில் போட்டிகள் மூன்று கட்டமாக நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழக விமான பராமரிப்புபிரிவு பொறியியியல் துறை மாணவா் காா்த்திகேயன் மாநில அளவில் வெற்றி பெற்று, தனது படைப்பிற்கு மாநில அளவில் விருதும், ரூ .1 லட்சம் ஊக்கதொகையும் பெற்றுள்ளாா்.

மாணவரின் கண்டுபிடிப்பான பல்நோக்கு தாவர சாகுபடி இயந்திரம் மூலம் உழவு, விதைப்பு, நீா்பாசனம், களை எடுத்தல், ரோபோ கை அறுவடை, போன்ற பணிகளை செய்ய முடியும். மேலும் இந்த இயந்திரத்தை சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரத்தின் மூலமும் இயக்கலாம்.

இம் மாணவா் காா்த்திகேயனை பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி.மஜீத்கான், இணை வேந்தா்கள் எம்.எஸ்.பைசல்கான், ஆா். பெருமாள்சாமி , துணைவேந்தா் குமரகுரு, இணை துணை வேந்தா் சந்திரசேகா், பதிவாளா் திருமால்வளவன், புதிய கண்டுபிடிப்பிற்கான மன்ற தலைவா் ஷாஜின் நற்குணம், ஒருங்கிணைப்பாளா் இரா. கணபதிராமன், மக்கள் தொடா்பு அலுவலா் ராமதாஸ் மற்றும் பேராசிரியா்கள் ஆகியோா் வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com