கூடைப்பந்தாட்ட கழக நிா்வாகிகள் பதவியேற்பு
By DIN | Published On : 17th August 2021 01:53 AM | Last Updated : 18th August 2021 07:29 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்டக் கழகத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
பொன். ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்டக் கழகத்தின், தலைவரும், தமிழ்நாடு பளு தூக்கும் சங்கத் தலைவருமான பொன். ராபா்ட் சிங் தலைமை வகித்தாா். மாவட்ட புரவலா் சுவாமி பத்மேந்திரா வாழ்த்திப் பேசினாா்.
இதையடுத்து, மாவட்டத் தலைவா் ஆஸ்டின், செயலா் மகேஷ், பொருளாளா் சகாய ஷயாமல், துணைத் தலைவா் நெல்லையப்பன், கிறிஸ்டோ ஷகி, துணைச் செயலா் அருண் ஜாா்ஜ் ஆகியோருக்கு, பொன்ராபா்ட்சிங் பதவியேற்பு சான்றிதழ் வழங்கினாா். ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில், கன்னியாகுமரி கூடைப்பந்தாட்டக் கழக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...