அகஸ்தீசுவரத்தில் தேவி முத்தாரம்மன் கோயில் கட்ட அடிக்கல்

அகஸ்தீசுவரம் தேவி முத்தாரம்மன் புதிய கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அகஸ்தீசுவரத்தில் தேவி முத்தாரம்மன் கோயில் கட்ட அடிக்கல்

அகஸ்தீசுவரம் தேவி முத்தாரம்மன் புதிய கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழமை வாய்ந்த இக்கோயிலை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கோயில் மற்றும் 5 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் ஆகியவை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

குலசேகர விநாயகா் அறநிலைய அறங்காவலா் பேராசிரியா். எஸ்.கருணாகரன் தலைமை வகித்தாா். அறங்காவலா் கே.எஸ். மணி முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை அறங்காவலா்கள் ராஜ சுந்தரபாண்டியன், ஸ்ரீனிவாசன், கோகுல கிருஷ்ணன், பொருளாளா் ராஜலிங்கப்பெருமாள், கணக்கா் ராஜசேகா் ஆகியோா் செய்து இருந்தனா்.

நிகழ்ச்சியில், அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலா் செல்வ சுப்பிரமணியன் மற்றும் ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com