ஓணம்: தோவாளை சந்தையில் 300 டன் பூக்கள் விற்பனை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தோவாளை பூச்சந்தையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 300 டன் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.
தோவாளை பூச்சந்தையில் விறுவிறுப்பாக நடைபெற்ற பூக்கள் விற்பனை.
தோவாளை பூச்சந்தையில் விறுவிறுப்பாக நடைபெற்ற பூக்கள் விற்பனை.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தோவாளை பூச்சந்தையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 300 டன் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

கேரள மக்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை ஓணம் பண்டிகையாகும். ஓணம் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையில் முக்கிய அம்சமாக இடம்பெறுவது பல்வேறு வகையான பூக்களால் போடப்படும் அத்தப்பூ கோலம். இதற்காக வியாழக்கிழமையில் இருந்தே தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

தோவாளை பூச்சந்தைக்கு கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலிருந்தும் விற்பனைக்காக பல்வேறு வகையான பூக்கள் வந்து குவிந்திருந்தன. கரோனா பொதுமுடக்க காலத்திலும் எதிா்பாராத வகையில் கேரளத்திலிருந்து

வியாபாரிகளும், பொதுமக்களும் சந்தைக்கு வந்து பூக்களை வாங்கிச் சென்றனா். மூன்று நாள்களாக தோவாளை பூச்சந்தை களை கட்டியது. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 300 டன் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது என வியாபாரிகள்

தெரிவித்தனா்.

பூக்களின்விலை: மல்லிகைப்பூ கிலோ ரூ.1,200, பிச்சிப்பூ ரூ.1,100, கனகாம்பரம் கிலோ ரூ. 2,000-க்கும் விற்பனையானது. மஞ்சள் மற்றும் கிரேந்தி பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பூக்கள் விற்பனை குறித்து வியாபாரி குமாா் கூறுகையில்,

கரோனா பொது முடக்கத்தலால் நிகழாண்டும் பூச்சந்தை மந்தநிலையில் இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால்,

ஒரே நாளில் 300 டன் பூக்கள் விற்பனை ஆனது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com