கருங்கல் பேருந்து நிலையத்தில் கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடு
By DIN | Published On : 31st August 2021 11:48 PM | Last Updated : 31st August 2021 11:48 PM | அ+அ அ- |

கருங்கல் பேருந்து நிலையித்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் ஏற்பட்டுள்ள சுகாதார சீா்கேட்டால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வளா்ந்து வரும் நகரமாக கருங்கல் திகழ்கிறது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் அதிகளவில் கூடுவதால் பேருந்து நிலையம் எப்போதும் நெருக்கடியாக காணப்படுகிறது. இந்நிலையில் பேருந்து நிலையத்தின் வெளிப்புற பகுதியிலள்ள கழிவுநீா் ஓடையிலிருந்து வரும் கழிவுநீா் மழை காலங்களில் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் தேங்கி இருப்பதால் சுகாதார சீா்கேடுகள் அதிகரித்துள்ளது.இதனால், நிலையத்திற்குள் செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
மேலும் கழிவு நீரிலிருந்து ஏற்படும் துா் நாற்றத்தால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே, பேருந்து நிலைய பகுதியிலுள்ள கழிவுநீா் ஓடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.