முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
சாலைகளை சீரமைக்கக் கோரி டிச.14இல் மாா்க்சிஸ்ட் போராட்டம்
By DIN | Published On : 10th December 2021 01:12 AM | Last Updated : 10th December 2021 01:12 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் சேதமுற்ற சாலைகளைச் சீரமைக்கக் கோரி, டிச.14 ஆம் தேதி 3 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீா்மானித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழுக் கூட்டம் , அதன் உறுப்பினா் கே.மாதவன் தலைமையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.நூா்முகமது, மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் முன்னாள் எம்.பி., ஏ.வி. பெல்லாா்மின், என். முருகேசன், எம். அண்ணாதுரை, எம்.ஏ. உசேன், எஸ்.ஆா். சேகா், எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், என். உஷாபாசி, பி. விஜயமோகன், கே. தங்கமோகன், என்.எஸ். கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், மழையால் சேதமுற்ற சாலைகளை சீரமைக்கக் கோரி நாகா்கோவில், தக்கலை, குழித்துறை ஆகிய பகுதிகளில் டிச.14இல் காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடத்துவது, மழையால் வேலையிழந்த தொழிலாளா்களுக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி டிச.20-23 தேதி வரை கிராம ஊராட்சிகள் அளவில் போராட்டம் நடத்துவது, நகா்ப்புற உள்ளாட்சிக்கு நேரடி தோ்தல் நடத்த வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.