முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
மூன்றாவது மொழியைக் கற்க கட்டாயப்படுத்தக் கூடாது: உயா் கல்வித்துறை அமைச்சா் பேச்சு
By DIN | Published On : 10th December 2021 01:18 AM | Last Updated : 10th December 2021 01:18 AM | அ+அ அ- |

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயா் கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி பேசியது:
தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது. மாணவா்கள் விருப்பப்பட்டால் மூன்றாவது மொழியை கற்கலாம் என்ற நிலை வேண்டும். அதை விடுத்து மூன்றாவது மொழியைக் கற்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. இதை ஆளுநரும் ஆதரிக்க வேண்டும்.
சங்க காலத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண் கல்வியும் இருந்தது; ஆனால் இடையில் பெண்களின் கல்வியைத் தடுத்துவிட்டனா். தற்போது மீண்டும் பெண்கள் அதிகளவில் படிக்கத் தொடங்கியுள்ளனா். ஆண்களைவிட அதிகளவில் பெண்கள் கல்வி மேம்பட்டுள்ளது. அதன்படி தற்போது பட்டம் பெறுவோரில் 70 சதம் போ் பெண்களே. எனவே சங்க காலம் மீண்டும் திரும்புகிறது.
பாரதிதாசன் அன்றே கல்வி குறித்து ஏராளமாகக் கூறியுள்ளாா். கல்வி கற்காத பெண்களை களா் நிலத்துக்கு ஒப்பிடுகிறாா். அதுபோல கற்ற பெண்களின் சமூகம் சிறக்கும் எனக் கூறும் அவா் கல்வியை விரும்பிக் கற்குமாறும் கூறுகிறாா். வரும் காலத்துக்கேற்ற வகையில் கல்வியில் மாற்றம் தேவை. எனவேதான் பொறியியல் கல்வியுடன் மாணவா்களுக்கு தொழில் தொடா்புடைய பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன என்றாா் அமைச்சா்.