முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
அரசு மருத்துவமனையில் தட்டுப்பாடின்றி மருந்துகள்: எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ வலியுறுத்தல்
By DIN | Published On : 10th December 2021 01:12 AM | Last Updated : 10th December 2021 01:12 AM | அ+அ அ- |

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி அனைத்து மருந்துகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து, தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள மனு: நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான உள் நோயாளிகளும், ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளும், பிற உபகரணங்களும் இல்லாததால், நோயாளிகள் வெளியிலிருந்து மருந்துகள் வாங்கி வந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறாா்கள்.
எனவே, போதிய மருந்துகளை இருப்பு வைத்து, நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.