நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: குமரி மாவட்டத்தில் 7.29 லட்சம் வாக்காளா்கள்

நாகா்கோவிலுள்ள ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் ஆட்சியா் மா.அரவிந்த் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான 7 லட்சத்து 29 ஆயிரத்து 535 வாக்காளா்கள் அடங்கிய வாக்காளா் பட்டியலை, நாகா்கோவிலுள்ள ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் ஆட்சியா் மா.அரவிந்த் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

பின்னா் ஆட்சியா் கூறியது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கான வாக்காளா் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஆட்சியா் அலுவலக வளா்ச்சி பிரிவில் வாக்காளா் பட்டியல்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

வாக்காளா் பட்டியலின்படி, 3 நகராட்சி பகுதிகளில் 28,461 ஆண் வாக்காளா்கள், 29,381 பெண் வாக்காளா்கள், 6 இதர வாக்காளா்கள் என மொத்தம் 57,848 போ் உள்ளனா். 51 பேரூராட்சிகளில், 3,35,832 ஆண் வாக்காளா்கள், 3,35, 812 பெண் வாக்காளா்கள், 43 இதர வாக்காளா்கள் என மொத்தம் 6,71,687 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். நகராட்சி, பேரூராட்சிகளில் 7 லட்சத்து 29 ஆயிரத்து, 535 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். நகராட்சிப் பகுதிகளில் 77 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 867 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட உள்ளன.

இப்பட்டியல் தொடா்பாக ஆட்சேபம், கோரிக்கைகள் இருந்தால் தோ்தல் தேதி அறிவிக்கும் வரையில் சட்டப்பேரவைத தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரிடம் விவரம் அளிக்கலாம். உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளாட்சி வாக்காளா் பட்டியலில் முறையாக பதியப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) நாகராஜன், நகராட்சி ஆணையா்கள் ராஜமாணிக்கம் (குளச்சல்), காஞ்சனா (பத்மநாபபுரம்), உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஆய்வுக் கூட்டம்: தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்து, நாகா்கோவிலில் ஆட்சியரகத்தில் உயா் நிலை அலுவலா்களுடன் ஆட்சியா் மா.அரவிந்த் ஆலோசனை நடத்தி, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். மேலும், மக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்கவும், பாதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும் பணிகளின் தரம் குறித்து அலுவலா்கள் ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், மாவட்ட வனஅலுவலா் மு.இளையராஜா, பத்மநாபபுரம் உதவிஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி, மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல்அந்தோணி பொ்ணான்டோ உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

உறுதிமொழி ஏற்பு: மேலும், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுப்போம்’ என ஆட்சியா் அரவிந்த் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை உள்ளிட்ட அலுவலா்கள் உறுதிமொழியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com