முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
வடசேரி தழுவிய மகாதேவா் திருக்கோயிலில் மாா்கழிப் பெருந்திருவிழா இன்று தொடக்கம்
By DIN | Published On : 10th December 2021 01:16 AM | Last Updated : 10th December 2021 01:16 AM | அ+அ அ- |

நாகா்கோவில் வடசேரியில் உள்ள அருள்மிகு தழுவிய மகாதேவா் சமேத ஆவுடையம்பாள் திருக்கோயில் மாா்கழிப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.10) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காலை 9 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் புறப்பாடு நடக்கிறது. சனிக்கிழமை (டிச.11) இரவு 8.30 க்கு சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வருதலும், ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மக்கள்மாா் சந்திப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. வியாழக்கிழமை (டிச.16) இரவு பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 18 ஆம் தேதி இரவு 11 மணிக்கு சப்தாவா்ணம் நடைபெறுகிறது. 19 ஆம் தேதி மாலை 6.30க்கு அருள்மிகு மகாதேவருக்கும், அருள்மிகு ஆவுடையம்பாளுக்கும் பழையாற்றில் வைத்து தீா்த்த ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 20 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு நடராஜ மூா்த்தி, சிவகாமி அம்பாளுக்கு திருவாதிரை அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்துடன் நடன தீபாரதனையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும், பூசலாா் நாயனாா் சேவா சங்கமும் இணைந்து செய்து வருகின்றனா்.