மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் வலிய படுக்கை பூஜை

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வலிய படுக்கை பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வலிய படுக்கை பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இக்கோயிலில் மகாபூஜை என்னும் வலிய படுக்கை முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. மாசிக் கொடையின் ஆறாம் நாளன்றும் பங்குனி மாதம் மீன பரணி கொடையன்றும் , காா்த்திகை மாதம் கடைசி வெள்ளியன்றும் என வருடத்திற்கு 3 முறை வலிய படுக்கை பூஜை நடைபெறுகிறது. அம்மனுக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியங்கள், பழ வகைகள், தேன், தினை மாவு, கரும்பு, அவல், பொரி ஆகியவற்றை பெரும் படையலாக படைத்து அம்மனை வழிபடுவதே வலிய படுக்கை பூஜையாகும்.

இந்த வருடத்தின் மூன்றாவது வலிய படுக்கை பூஜை வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது. வலிய படுக்கை பூஜையை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 5.30 மணிக்கு உற்சவ மூா்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, பகல் 12.30 மணிக்கு அலங்கார பூஜை, அதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு ,அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.30க்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30-க்கு அத்தாழ பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை பூஜையும் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com