குளச்சல் அருகே வீட்டின் கதவை உடைத்து 83 பவுன் நகைகள் திருட்டு

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே விசைப்படகு உரிமையாளா் வீட்டின் கதவை உடைத்து 83 பவுன் நகைகளை புதன்கிழமை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே விசைப்படகு உரிமையாளா் வீட்டின் கதவை உடைத்து 83 பவுன் நகைகளை புதன்கிழமை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குளச்சல் அருகேயுள்ள வாணியக்குடியை சோ்ந்தவா் ஆன்றனிபாபு (48). கேரளத்தில் விசைப்படகு வைத்து மீன்பிடிதொழில் செய்து வருகிறாா். இவருக்கு ராணி என்ற மனைவியும், இரு மகள்களும், மகனும் உள்ளனா்.

இந்நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த ஆன்றனிபாபு, புதன்கிழமை அருகிலுள்ள கோயில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தாா். பின்னா், இரவில் அனைவரும் வீடு திரும்பியபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பிரோவில் வைத்திருந்த 83 பவுன் நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், குளச்சல் போலீஸாா் வழக்குப்பதிந்தனா். டி.எஸ்.பி. தங்கராமன், காவல் ஆய்வாளா் அருள்பிரகாஷ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா். விரல் ரேகை நிபுணா்கள்தடங்களை பதிவுசெய்தனா். மோப்பநாய் சோதனைக்கு விடப்பட்டது. தொடா்ந்து விசாரணை நடக்கிறது.

ஆலயத்தில் திருட்டு: மண்டைக்காடு புதூா் புனித லூசியாள் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு அா்ச்சிப்பு விழாவும், அதைத் தொடா்ந்து, திருவிழாவும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை ஆலயச் செயலா் சகாயராஜ் ஆலயத்துக்கு வந்தபோது, மாதா சொரூபத்தில் அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரை பவுன் கம்மலை காணவில்லையாம். மேலும், ஆலயத்திலிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணமும் திருடப்பட்டிருந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில், மண்டைக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com