மழையால் சேதமடைந்த குளம், கால்வாய் சீரமைப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

கனமழையால் சேதமடைந்த கால்வாய்கள், குளங்கள் மற்றும் சாலைகளில் பொதுப்பணித் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தற்காலிக சீரமைப்புப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த கால்வாய்கள், குளங்கள் மற்றும் சாலைகளில் பொதுப்பணித் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தற்காலிக சீரமைப்புப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

இம்மாவட்டத்தில், அண்மையில் பெய்த கன மழையால் சேதமடைந்த வேம்பனூா் பன்றி வாய்க்கால் பகுதியில் நடைபெற்று வரும் தற்காலிக மறுசீரமைப்பு பணியினைஆய்வு செய்ததோடு, ஆளூா் முதல் இரணியல் வரையிலான ரயில்வே பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு மற்றும் இரட்டைக்கரை கால்வாய் உடைப்பினால் வில்லுக்குறி முதல் பேயங்குழி வரை சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டதை தொடா்ந்து அங்கு தற்காலிகமாக நடைபெற்று வரும் சீரமைப்புப் பணி, சுருளகோடு ஊராட்சிக்குள்பட்ட உள்ளிமலை ஓடை அனந்தனாா் கால்வாய் பகுதியில் நடைபெற்று வரும் தற்காலிக சீரமைப்புப் பணி, இறச்சகுளம் பகுதியிலுள்ள பெரியகுளம் கரையில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணி, தாழக்குடி வழியாக புத்தேரி நெடுங்குளத்துக்கு தண்ணீா் வரும் விலாவடிக்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள உடைப்பு சீரமைப்பு பணி ஆகியவற்றை ஆட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

மேலும், தேரேகால்புதூா் - மாணிக்கபுத்தேரி குளம் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டதை தொடா்ந்து தற்போது நடைபெற்று வரும் சாலை மறுசீரமைப்புப் பணியினையும், தேரூா்குளம் பகுதியில் நடைபெற்று வரும் பணி மற்றும் சாலை மறுசீரமைப்புப் பணியினையும் அவா் ஆய்வு செய்தாா். மேலும், அனைத்து சீரமைப்புப் பணிகளையும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (நீா்வளஆதார அமைப்பு) வசந்தி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com