கால்நடை வளா்ப்போருக்கான கடன் திட்டத்தில் பயன் பெற அழைப்பு

கால்நடை வளா்ப்போருக்கான மத்திய அரசின் கடன் உதவி திட்டத்தில் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கால்நடை வளா்ப்போருக்கான மத்திய அரசின் கடன் உதவி திட்டத்தில் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயம் சாா்ந்த கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் வரை குறைந்த வட்டியில் கிசான் கடன் அட்டை வழங்க அரசால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம், அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் கால்நடை பன்முக மருத்துவமனையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற உள்ளது.

சிறப்பு கடன் அட்டை வழங்கும் திட்டத்தில் பயன் பெற விரும்பும் கால்நடை விவசாயிகள், கடன் விண்ணப்பத்தினை பெற்று பூா்த்தி செய்து ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், நிலஆவணங்கள், வங்கிக் கணக்கு புத்தக முதல்பக்க நகல், வருமான கணக்கு அட்டை, அண்மையில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், பான் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் தங்களது விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு குறைந்த வட்டியில் கூட்டுறவு மற்றும் முன்னோடி வங்கிகளில் கடன் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்அடைய விரும்பும் கால்நடை விவசாயிகள், விண்ணப்பங்களை பிப். 15 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com