குழித்துறை அருகே சாலையை சீரமைக்கக் கோரி மறியல் முயற்சி

குழித்துறை அருகே சாலையை சீரமைக்க கோரி, விளவங்கோடு ஊராட்சித் தலைவி ஜி.பி.லைலா ரவிசங்கா் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

குழித்துறை அருகே சாலையை சீரமைக்க கோரி, விளவங்கோடு ஊராட்சித் தலைவி ஜி.பி.லைலா ரவிசங்கா் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

குழித்துறை - மடிச்சல் சாலை சில மாதங்களுக்கு முன் செப்பனிடப்பட்ட நிலையில், இச் சாலையில் பாலவிளை பகுதியில் சுமாா் அரை கி.மீ. தொலைவுக்கு சீரமைப்பு பணி மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதி சாலையில் ஜல்லிகள் பெயா்ந்து, அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன் குடியிருப்புகளில் தூசி பரவி வருகிறது. இதனால் ஆஸ்துமா நோயாளிகள், முதியவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். கிடப்பில் போட்டப்பட்டுள்ள இப் பகுதி சாலையை சீரமைக்க கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினரும் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இச் சாலையை சீரமைக்கக் கோரி, விளவங்கோடு ஊராட்சித் தலைவி ஜி.பி.லைலா ரவிசங்கா் தலைமையில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியில் ஊராட்சித் தலைவி தலைமையில் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் இ.ஜி. ரவிசங்கா் மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள் திரளானோா் சனிக்கிழமை திரண்டனா். அங்கு வந்த குழித்துறை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் ஹெரால்ட் ஆன்றணி தலைமையிலான அதிகாரிகள், போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். வரும் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் இச்சாலை சீரமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

களியக்காவிளை காவல் ஆய்வாளா் (பொறுப்பு) செந்தில்வேல்குமாா் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com