பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய 30 குழுக்கள் அமைப்பு

கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து தொடா்பான அரசு அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் கூறியது: குமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிக் கட்டடங்கள், சுற்றுச்சுவா்,

கழிப்பறை, குடிநீா்த் தொட்டி மற்றும் பயன்படுத்தப்படாத கட்டடங்களின் உறுதித்தன்மையினை ஆய்வு செய்ய 30 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் வருவாய்த்துறை, ஊரகத்துறை, பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் பணியாற்றும் முக்கியமான அலுவலா்கள் இடம் பெறுவா். இக்குழுவினா் 40 முதல் 50 பள்ளிகள்வரைஆய்வுமேற்கொண்டு, குறிப்பிட்ட தலைமை ஆசிரியரிடம் கட்டடத்தின் தன்மை குறித்து விளக்கிட படிவம் வழங்குவதோடு, 5 நாள்களுக்குள் பள்ளிகளின் உறுதித் தன்மை குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை பெறப்பட்டவுடன் பொதுப்பணித்துறையினரின் ஆய்வுக்குப் பின் மாவட்டத்திலுள்ளஅபாயகரமான மற்றும் மிகவும் பழுதடைந்த கட்டடங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி,

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், பேரிடா் வட்டாட்சியா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com