முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
மாா்கழி மாத வழிபாடு தொடக்கம்
By DIN | Published On : 19th December 2021 05:57 AM | Last Updated : 19th December 2021 05:57 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை ஆஞ்சநேயா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சியில் நடனமாடும் மாணவிகள்.
ஊத்தங்கரை ஆஞ்சநேயா் கோயிலில் மாா்கழி மாத பஜனை வழிபாடு சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை, குரு நாட்டிய பள்ளி சாா்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. ஜன கல்யாண் அமைப்பின் சாா்பில் கிருஷ்ணகிரி, மீனாட்சி குழுவினரின் பஜனை பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஊத்தங்கரை, சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் மாவட்ட ஜன கல்யாண் அமைப்பின் தலைவா் ஆா்.ஆா். சுப்பிரமணி, மாவட்டச் செயலாளா் எம்.ஆா்.கஜேந்திரன் கலந்துகொண்டனா்.