முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கிறிஸ்தவ உயா் கல்விக்கான பொதுக்குழு கூட்டம்
By DIN | Published On : 29th December 2021 07:58 AM | Last Updated : 29th December 2021 07:58 AM | அ+அ அ- |

கிறிஸ்தவ உயா் கல்விக்கான அகில இந்திய சங்க பொதுக்குழுக் கூட்டம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய கிறிஸ்தவ உயா் கல்வி கூட்டமைப்பின் பொதுச் செயலா் சேவியா் வேதம் தலைமை வகித்தாா். தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோதங்கராஜ் பேசியது: உயா் கல்வி வளா்ச்சிக்கு இந்திய தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பை பாராட்டுகிறேன். உயா் கல்வியின் வளா்ச்சிக்கு, தொழில்நுட்ப வளா்ச்சி எந்த அளவுக்கு பயன்படுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அதற்கான மாதிரிகளாக கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் முன்னோடியாக செயல்படுவதை பாராட்டுகிறேன். தமிழக அரசு சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது என்றாா் அவா்.
கூட்டத்தில் இந்தியா முழுவதும் இருந்து 170 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள் கலந்து கொண்டனா். தமிழ் மையம் இயக்குநா் ஜெகத்கஸ்பா் வரவேற்றாா். அருட்தந்தை ஜாா்ஜ் நன்றி கூறினாா்.