முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குமரியில் மினி சப்-ஜூனியா் சிலம்பப்போட்டி
By DIN | Published On : 29th December 2021 07:40 AM | Last Updated : 29th December 2021 07:40 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அமெச்சூா் சிலம்ப சங்கம் சாா்பில் 18 ஆவது மாநில அளவிலான மினி சப்-ஜூனியா் (11- வயதுக்குள்பட்டோா்) சிலம்பப் போட்டி கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அகில இந்திய சிலம்பம் சம்மேளன பொதுச்செயலா் டி.ஐரின் செல்வராஜ் போட்டியை தொடங்கி வைத்தாா். இதில், போட்டி இயக்குநா் சுதாகா், குமரி மாவட்டச் செயலா் அருண்பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களைச் சோ்ந்த 500 க்கும் மேற்பட்ட வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் ஆண், பெண் வீரா்கள் தலா 24 போ் தோ்வு செய்யப்படுவா். இவா்கள் ஜனவரி 29 , முதல் 31 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.
தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கம்பு வீச்சு, இரட்டை கம்புவீச்சு, அலங்கார வீச்சு, ஒற்றைவாள் வீச்சு, இரட்டை வாள்வீச்சு, வேல்கம்பு, சுருள்வாள், குத்துவரிசை, ஆயுத ஜோடி, ஆயுத குழு வீச்சு உள்ளிட்ட 13 போட்டிகளில் 9 எடை பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.