குமரியில் சாலைப் பணிகளுக்கு ரூ. 2.45 கோடி நிதி ஒதுக்கீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு சாலைப் பணிகளுக்கு ரூ. 2.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு சாலைப் பணிகளுக்கு ரூ. 2.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் வெளியிட்ட அறிக்கை: அழகப்பபுரம் பேரூராட்சி திருமூலநகா் முதல் குருசுமலை சாலை மேம்பாட்டுப் பணிகள், பொட்டல்குளம் அரசமூடு முதல் கூண்டு பாலம் வரை சாலைப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, மூலதன மானிய நிதியின்கீழ் 2ஆவது கட்டமாக ரூ.1.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

மேலும், ஆரல்வாய்மொழி பேரூராட்சியில், தாணுமாலையன்புதூா் பிள்ளையாா் கோயில் தெரு, வடக்கு தெரு, இல்லத்தாா் பிரதான சாலை, இல்லத்தாா் மேற்கு தெரு, கிழக்கு பெரிய தெரு, பெரிய தெரு, மீன்சந்தை முதல் தெரு, 2ஆவது தெரு, கரடிமாடன் கோயில் தெரு வரை, சுப்பிரமணியபுரம் முருகன் கோயில் தெரு, சுசீந்திரம் பேரூராட்சியில் ஆசாரிமாா் தெரு, விநாயகா் தெரு உள்ளிட்ட தெருக்களில் அலங்கார தரைக் கற்கள் பதிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 1.30 கோடி என மொத்தம் ரூ. 2.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com