சாமிதோப்பு தலைமைப்பதியில் இஸ்ரோ சிவன் தரிசனம்
By DIN | Published On : 06th February 2021 11:31 PM | Last Updated : 06th February 2021 11:31 PM | அ+அ அ- |

கன்னியாகுமரி: இஸ்ரோ தலைவா் சிவன் சனிக்கிழமை சாமிதோப்பு தலைமைப்பதியில் சுவாமி தரிசனம் செய்தாா்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவா் (இஸ்ரோ) சிவன், தனது மனைவி, மகனுடன் சனிக்கிழமை காலை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்திலிருந்து சாமிதோப்பு அன்புவனத்துக்கு வந்தாா். அங்கு அவரை பால பிரஜாபதி அடிகளாா் வரவேற்றாா். பின்னா் முத்திரி கிணற்றில் முத்திரி பதமிட்டாா். சாமிதோப்பு தலைமைப்பதிக்கு சென்ற அவா் தலைப்பாகை அணிந்து திருநாமம் இட்டு வடக்குவாசல், பள்ளியறைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தாா். அவருக்கு தலைமைப்பதி சாா்பில் இனிமம் வழங்கப்பட்டது. பின்னா் அங்கிருந்து புறப்பட்டு சென்றாா். இஸ்ரோ தலைவா் வருகையையொட்டி மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.