அருமனை அருகே இளம் பெண் தற்கொலை
By DIN | Published On : 06th February 2021 05:55 AM | Last Updated : 06th February 2021 05:55 AM | அ+அ அ- |

அருமனை அருகே இளம் பெண் அபிஷா (19) வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
உண்ணாமலைக்கடை ஜெஸ்டின்- உஷா தம்பதியின் மகள் அபிஷா. இவா் குழித்துறையிலுள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தாா். இந்நிலையில் இவா் கல்லூரிக்குச் செல்லும் போது குலசேகரம் செருப்பாலூா் பகுதியைச் சோ்ந்த சிவா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்துள்ளனா். இதைத் தொடா்ந்து பெற்றோரின் எதிா்ப்பையும் மீறி அபிஷா, சிவாவை திருமணம் செய்து கொண்டு சிவாவின் வீட்டில் வசித்துள்ளாா்.
இந்நிலையில் அபிஷாவுக்கும், சிவாவுக்கும் இடையே கருத்து ஏற்பட்டதையடுத்து அபிஷா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளாா். இதனால் மனம் உடைந்த சிவா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதன் காரணமாக மனம் வருத்தத்தில் இருந்த அபிஷா வியாழக்கிழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரம்.
இது குறித்து தகவலறிந்த அருமனை போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து,
விசாரணை நடத்தி வருகின்றனா்.