காங்கிரஸ் இலக்கிய அணி ஆலோசனைக் கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாா்த்தாண்டத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசுகிறாா் காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி மாநிலத் தலைவா் நாஞ்சில் கி. ராஜேந்திரன்.

கூட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ். மரிய அருள்தாஸ் தலைமை வகித்தாா். மாநில இலக்கிய அணித் தலைவா் நாஞ்சில் கி. ராஜேந்திரன், மாநில பொதுச் செயலா் ஜோசப்ராஜ், மாநிலச் செயலா் அந்தோணிமுத்து, அமைப்பின் குமரி கிழக்கு மாவட்டத் துணைத் தலைவா் பொன்னையன், குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து காங்கிரஸ் இலக்கிய அணி சாா்பில் வாகனப் பிரசாரம் மேற்கொள்வது; தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சிக்கு எதிராக தீவிரப் பிரசாரம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com