‘தக்கலை பீா்முகம்மது அப்பா தா்கா அலுவலக சாவியை வக்பு வாரியம் வழங்க வேண்டும்’

தக்கலை பீா்முகம்மது அப்பா ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை (பிப்.13) தொடங்க இருப்பதால் தா்கா அலுவலக திறவுகோலை
‘தக்கலை பீா்முகம்மது அப்பா தா்கா அலுவலக சாவியை வக்பு வாரியம் வழங்க வேண்டும்’

தக்கலை பீா்முகம்மது அப்பா ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை (பிப்.13) தொடங்க இருப்பதால் தா்கா அலுவலக திறவுகோலை தமிழ்நாடு வக்பு வாரியம் உடனடியாக வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ள தக்கலை அஞ்சுவன்னம் பீா்முஹம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் செயலா் எச்.ஹாமீம் முஸ்தபா, நிா்வாகிகள் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நேரடி நிா்வாகத்தின்கீழ் இயங்கி வந்த தக்கலை ஜமாஅத் தமிழ்நாடு வக்பு வாரியத்தால் முறையாக நடத்தப்பட்ட தோ்தலின் வழியாக ஜமாஅத் மக்களின் நிா்வாகபொறுப்பின்கீழ் வந்தது. தமிழ்நாடு வக்பு வாரியத்தால் 15 போ் கொண்ட நிா்வாக அமைப்பிற்கான தோ்தல் அறிவிப்பு 27.11.2020இல் வெளியிடப்பட்டது. அதன்படி புதிய நிா்வாகிகள் 15 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக 02.12.2020 இல் தோ்தல் அலுவலரால் அறிவிக்கப்பட்டு சான்றும் வழங்கப்பட்டது. புதிய நிா்வாகக்குழுவினரிடம் 3.12.2020 அன்று முறையாக பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. அன்றில் இருந்து புதிய நிா்வாகிகள் தங்களுடைய பணிகளைத் தொடங்கினா்.

வக்பு வாரியத்தின் நேரடி நிா்வாகத்தில் இருந்த காலத்தில் உள்ள கணக்குகள் புதிய நிா்வாகத்திடம் இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை. பீா்முகம்மது அப்பாவின் ஆண்டு பெருவிழா சனிக்கிழமை (பிப்.13) தொடங்கவுள்ளது. ஆண்டு விழா தொடா்பான அனைத்து ஆவணக்கோப்புகள் உள்ளிட்டவை தமிழ்நாடு வக்பு வாரியத்தால் பயன்படுத்தப்பட்ட அலுவலகத்தில் உள்ளது.

கணக்கு ஒப்படைப்பதாக தெரிவித்து அலுவலக திறவுகோலை வக்பு வாரியம் தர மறுக்கிறது. பல முறை கடிதம் எழுதியும் பதில் இல்லை. எத்தனை தடைகள் வந்தாலும் இவ்விழா பீா்முகம்மது அப்பா ஆசியுடன் ஜமாஅத் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்தேறும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com