நாகா்கோவிலில் மறியல்: அரசு ஊழியா்கள் 30 போ் கைது

நாகா்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 30 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 30 போ் கைது செய்யப்பட்டனா்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் தொடா் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மூட்டா முன்னாள் தலைவா் மனோகரஜஸ்டஸ் உரையாற்றினாா். அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் கிறிஸ்டோபா் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட அரசு ஊழியா்கள் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com