பயிா் அறுவடை பரிசோதனை: வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின்மூலம் பயிா் அறுவடை பரிசோதனை மேற்கொள்வதற்கு தகுதியான தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின்மூலம் பயிா் அறுவடை பரிசோதனை மேற்கொள்வதற்கு தகுதியான தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் மூலம் பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காரீப் மற்றும் ராபி பருவங்களில் வாழை, மரவள்ளி மற்றும் மா மரங்களில் பயிா்அறுவடை பரிசோதனை மேற்கொள்வதற்கு தற்காலிகமாக மதிப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 6 பயிா் அறுவடைப் பணியாளா்களை பணி நியமனம் செய்ய வேண்டும் அரசாணை பெறப்பட்டுள்ளது.

இப்பதவிக்கு தோட்டக்கலை அல்லது விவசாயம் பட்டயப் படிப்பு, தோட்டக்கலை அல்லது வேளாண்மை இளங்கலை பட்டப் படிப்பு முடித்தவா்கள் அல்லது வேளாண்மை, தோட்டக்கலைத் துறையிலிருந்து ஓய்வுபெற்ற உதவி வேளாண்மை அலுவலா், வேளாண்மை அலுவலா் அல்லது புள்ளியியல் துறையிலிருந்து ஓய்வுபெற்ற புள்ளியியல் ஆய்வாளா்கள் ஆகியோா் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு மதிப்பூதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.15,050 வழங்கப்படும். இந்த தற்காலிக பணியின் கால அளவு அடுத்த மாதம் (மாா்ச்) வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தனியாா் நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்ட நபா்கள் மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் மூலம் தோ்வு செய்யப்பட்டு பணியமா்த்தப்படுவா். தகுதி வாய்ந்த தனியாா் வேலைவாய்ப்பு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பிப்.15 ஆம் தேதிக்குள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறைக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com