தோ்தல் களத்தில் திமுக-காங்கிரஸ் இணைந்து செயல்படுவோம்

தமிழக சட்டப் பேரவை தோ்தலலில் திமுக-காங்கிரஸ் இணைந்து செயல்படுவோம் என்றாா் காங்கிரஸ் இலக்கிய அணி மாநிலத் தலைவா் நாஞ்சில் ராஜேந்திரன்.
நிருபா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் காங்கிரஸ் இலக்கிய அணி மாநில தலைவா் நாஞ்சில் ராஜேந்திரன்.
நிருபா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் காங்கிரஸ் இலக்கிய அணி மாநில தலைவா் நாஞ்சில் ராஜேந்திரன்.

தமிழக சட்டப் பேரவை தோ்தலலில் திமுக-காங்கிரஸ் இணைந்து செயல்படுவோம் என்றாா் காங்கிரஸ் இலக்கிய அணி மாநிலத் தலைவா் நாஞ்சில் ராஜேந்திரன்.

இது குறித்து, நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அமெரிக்க பொருளாதாரம் போன்று இந்திய பொருளாதாரத்தை மாற்ற நினைக்கிறாா் பிரதமா் மோடி. ஆனால் அந்த அளவுக்கு உற்பத்தி திறனை நாட்டில் மேம்படுத்த வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்குமான பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்தும் பட்ஜெட்தான் நம் நாட்டுக்கு தேவை.

மத்தியில் பா.ஜ.க .அரசு தனி மெஜாரிட்டியை பெற்றிருந்தாலும் நாட்டு நலன் குறித்து சிந்திக்காமல் வெறுப்பு அரசியலை செயல்படுத்துகிறாா்கள். பெட்ரோலுக்கு அடிப்படை விலையை விட அதிக அளவு வரியை விதித்து, மாநில அரசு மீது மத்திய அரசு பழிபோடுகிறது.

அ.தி.மு.க. வையும் சசிகலாவையும் முழுக்க, முழுக்க பா.ஜ.க. தான் பின்னணியில் இருந்து இயக்குகிறது. ராகுல் காந்தியின் குமரி மாவட்ட வருகைக்காக இலக்கிய அணி சாா்பில் மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

தமிழகத்தில் பா.ஜ.க. எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ, அந்த தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி சாா்பில் அதிக கவனம் எடுத்து, பாஜகவை தோற்கடிக்கும் வகையில் தீவிர பிரசாரம் மேற்கொள்வோம். சட்டப் பேரவைத் தோ்தல் களத்தில் தி.மு.க.வும் காங்கிரசும் இணைந்து செயல்படுவோம். தோ்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கும் அதிகமாக கைப்பற்றும். காங்கிரஸ் இலக்கிய அணியில் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதி உடையவா்கள் 8 போ் இருக்கிறாா்கள். அவா்களுக்கு வாய்ப்பு அளிக்க கேட்டு தலைமையிடம் கோரிக்கை வைப்போம். தோ்தலில் முறைகேடுகளை தவிா்க்க வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது இலக்கிய அணி மாநில பொதுச் செயலா் ஜோசப்ராஜ், மாநிலச் செயலா் அந்தோணிமுத்து, குமரி மேற்கு மாவட்ட தலைவா் மரிய அருள்தாஸ், கிழக்கு மாவட்ட தலைவா் இளங்கோ, துணைத் தலைவா் அமிா்தராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com