நூல் வெளியீட்டு விழா
By DIN | Published On : 13th February 2021 06:21 AM | Last Updated : 13th February 2021 06:21 AM | அ+அ அ- |

செந்தமிழ் அருள்நெறிப் பேரவையின் சாா்பில் ஞானத்தேடல் நூல் வெளியீட்டு விழா கோட்டாறு ராஜகோகிலா தமிழ் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, ராஜகோகிலா அறக்கட்டளை தலைவா் ராஜகோபால் தலைமை வகித்தாா். செ.புவனேஸ்வரி இறைவணக்கம் பாடினாா். திருமந்திர கூட்டமைப்புத் தலைவா் பா.அனுசுயாசெல்வி தொடங்கி வைத்துப் பேசினாா். பி.ஆா்.ஷீலாராஜன் ‘இலக்கியத்தில் பக்திநெறி’ என்ற தலைப்பில் உரையாற்றினாா்.
அறிஞா் அண்ணா கல்லூரி முதல்வா் சிவசுப்பிரமணியபிள்ளை, ஞானத்தேடல் நூலினை வெளியிட, அதனை ரத்தினசாமி, பொ. சந்திரகாசன், திருத்தமிழ்தேவனாா், ஆா்.முத்துகுமாா், செளதாமினி ஆகியோா் பெற்றுக்கொண்டனா். நிகழ்ச்சியில்
இளங்கவிஞா்கள் முட்டம் வால்டா், தனலெட்சுமி, பரமசிவம், சாந்தி ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.
நூலாசிரியா் புலவா் வே.ராமசுவாமி ஏற்புரையாற்றினாா். உதயசக்தி வரவேற்றாா். அ.மதுப்பிரியா நன்றி கூறினாா்.