நாகா்கோவிலில் பிப்.27இல்தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 17th February 2021 06:34 AM | Last Updated : 17th February 2021 06:34 AM | அ+அ அ- |

நாகா்கோவில்: நாகா்கோவிலில்தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (பிப்.27) நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நாகா்கோவில் தென்திருவிதாங்கூா் இந்துக் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாமை நடத்துகின்றன.
இம்முகாமில் பல தனியாா்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு, செவிலியா், கல்வியியல் பட்டப்படிப்பு முடித்த மாணவா்கள் கலந்து கொள்ளலாம். வேலைநாடுநா்கள் மற்றும் வேலையளிப்பவா்கள் இணையதளத்தில் பெயா் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9499055932 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.