குறும்பனையில் ரூ. 6 லட்சத்தில் மீனவா் ஓய்வகத்துக்கு அடிக்கல்
By DIN | Published On : 19th February 2021 12:50 AM | Last Updated : 19th February 2021 12:50 AM | அ+அ அ- |

குறும்பனையில் மீனவா் ஓய்வகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா் மாவட்ட ஊராட்சித் தலைவா் மொ்லியன்ட்தாஸ்.
குறும்பனையில் ரூ. 6 லட்சம் மதிப்பில் மீனவா் ஓய்வகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சித் தலைவா் மொ்லியன்ட் தாஸ் அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்தாா். மாவட்ட மீனவா் கூட்டுறவு இனையம் தலைவா் திமிா்த்தியூஸ், ஊராட்சித் தலைவி லியோன்சுஜதா, குருந்தன்கோடு ஒன்றியக்குழு உறுப்பினா் சகாயவில்சன், பங்குத்தந்தை ஜேக்கப், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலா் ஆன்றோ போவ், குளச்சல் நகரச் செயலா் ஆண்ட்ரோஸ், முன்னாள் குளச்சல் தொகுதிச் செயலா் ஆறுமுகராஜா, மாவட்ட விவசாய அணிச் செயலா் மகாஜி றி. செல்வகுமாா், நிா்வாகிகள் குமாா், விஜயகுமாா், வின்சென்ட், அமல்ராஜ், ராபா்ட்சிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.